Map Graph

சென்னகேசவப் பெருமாள் கோயில்

சென்னகேசவப் பெருமாள் கோயில் சென்னை நகரம் உருவாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் கட்டபட்டது.. சென்னகேசவப் பெருமாள் கோயில், தேவராஜ முதலியார் தெரு, சௌகார்பேட்டை, சென்னையில் அமைந்துள்ளது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வழங்கிய நிதி உதவியுடன் கட்டப்பட்ட கோயில்களில் இதுவும் ஒன்று. முன்னர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இரண்டு கோயில்கள் இருந்தன. அவற்றை ஆங்கிலேயர்கள் அப்புறப்படுத்தி சர்ச் கட்ட முயன்றபோது துவிபாஷியான மணலி ராமகிருஷ்ண முதலியார் அந்த கோவில்களை அழிக்க விடாமல் இந்த இடத்தில் பாரிமுனை பூக்கடை அருகே மீண்டும் நிர்மாணித்தார். ஸ்ரீசென்ன கேசவப்பெருமாள் கோயில் மற்றும் ஸ்ரீ சென்னமல்லீசுவரர் கோவில் இரண்டு கோவில்கள் இங்கே அமைந்து சென்னை என்ற பெயர் வரக் காரணமானது.

Read article
படிமம்:Chennakesavaperumal_temple2.JPG